Thursday, February 11, 2010

ஒரு மகனை பற்றிய தந்தையின் கனவு

கனவெல்லாம் பலிக்குதே!
கண்முன்னே நடக்குதே!
கனவெல்லாம் பலிக்குதே!
கண்முன்னே நடக்குதே!
வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கிடைக்கிறதே
வானவில் நிமிடங்கள் அழைக்கிறதே
என்னுடைய பிள்ளை என்னை ஜெயிக்கிறதே
என்னைவிட உயரத்தில் பறந்து சிகரம்தொட
என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூ பூத்து சிரிக்கின்றதே
எங்கே எங்கே என்று தினம்தோறும் நான்
எதிர்பார்த்த நாள் இன்று நடக்கிறதே

கனவெல்லாம்  பலிக்குதே
கண்முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே
கண்முன்னே நடக்குதே

நடைவண்டியில் நீ நடந்த
காட்சி இன்னும் கண்களிலே
நாளை உந்தன் பெயரைச் சொல்லும்
பெருமிதங்கள் நெஞ்சினிலே
என் தோலை தாண்டி வளர்ந்ததனால்
என் தோழன் நீயல்லவா
என் வேள்வியாவும் வென்றதனால்
என் பாதி நீயல்லவா
சந்தோஷ தேரில் தாவி ஏறி மனம் இன்று பறந்திட
என் வானத்தில் ஒரு நட்சத்திரம் புதிதாக
பூ பூத்து சிரிக்கின்றதே எங்கே எங்கே
என்று தினம்தோறும் நான்
எதிர்பார்த்த நாள் இன்று நடக்கின்றதே

கனவெல்லாம் பலிக்குதே கண்முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே கண்முன்னே நடக்குதே

கிளிக்கூட்டில் பொத்தி வைத்து
புலி வளர்த்தேன் இதுவரையில்
உலகத்தை நீ வென்றுவிடு
உயிர் இருக்கும் அதுவரையில்
எந்நாளும் காவல் காப்பவன் நான்
என் காவல் நீயல்லவா
எப்போதும் உன்னை நினைப்பவன் நான்
என் தேடல் நீயல்லவா
என் ஆதி அங்கம் யாவும் இன்று
ஆனந்த கண்ணீரில்
என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூ பூத்து சிரிக்கின்றதே
எங்கே எங்கே என்று தினந்தோறும் நான்
எதிர்பார்த்த நாள் இன்று நடக்கின்றதே

கனவெல்லாம் பலிக்குதே
கண்முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே
கண்முன்னே நடக்குதே

வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கிடைக்கிறதே
வானவில் நிமிடங்கள் அழைக்கிறதே
என்னுடைய பிள்ளை என்னை ஜெயிக்கிறதே
என்னைவிட உயரத்தில் பறந்து சிகரம்தொட
என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூ பூத்து சிரிக்கின்றதே
எங்கே எங்கே என்று தினந்தோறும் நான்
எதிர்பார்த்த நாள் இன்று நடக்கின்றதே...

ஒவ்வொரு தந்தையும் பிள்ளையின் எதிகாலத்தியும், எதிர்காலத்தில் அவர்கள் எப்படியெல்லாம் வெற்றி நடைபோட வேண்டுமென்று
கனவு கண்டு அந்த கனவு பலிக்கும் பட்சத்தில் அவர்களது சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை என்பதை இப்பாடல் விளக்குகிறது.
இப்பாடலுக்கு ஏற்ப ஒவ்வொருவரும் வாழ்ந்து பார்த்தால் சந்தோசம் நிட்சயமென்பதை உறக்க சொல்லி நன்றியுடன் என் வலைப்பக்கத்தில் பதிவு செய்கிறேன்
உங்கள் பரவை அசோக்குமார்
நன்றி வணக்கம்

Wednesday, January 13, 2010

சிங்கையிலே பொங்க‌ல்.

சிங்கையிலே!

சிராங்கூன் வீதியிலே!
குட்டி இந்தியா
க‌டைத் தொகுதியிலே!
பொழுது புல‌ரும் வேளையிலே!
பொங்கி வ‌ரும்
பொங்க‌லே!


பொங்க‌ல் சீருகொண்டு வ‌ந்தோம்
பொங்க‌ சோறும் பொங்கிவ‌ந்தோம்
க‌ரும்புத்துண்டும் வெட்டி வ‌ந்தோம்
கூட‌ ஒரு
க‌விதையொன்றும் ப‌டைத்து வ‌ந்தேன்!


விவ‌சாயி ம‌க‌னாய் நான் பிற‌ந்தேன்
விவ‌சாய‌ம் செய்து வாழ்ந்தேன்
விவ‌சாய‌த்துக்கு விடைகொடுத்து
க‌ட்டுமான‌ம் க‌ற்ற‌றிந்தேன்
க‌ட்டுமான‌ தொழில் தேடி
சிங்கை வ‌ந்தேன்


உற‌வுக‌ளோ அங்கிருக்க‍ - என்
உழுத‌ நில‌மும் அங்கிருக்க‌
பெத்த‌வ‌ளின் பாச‌ம் என்னை
அங்கிழுக்க‌ ப‌ண‌ம்
என்னை இங்கிழுக்க‌
பாச‌மா ப‌ண‌மா
என்ற‌ போட்டியிலே ப‌ண‌ம் (த‌ற்காலிக‌ம்) ஜெயிக்க‌


மாட்டுக் கொம்பிலே சாய‌ம் த‌ட‌வி
மாலையிட்டு ம‌னிக‌ட்டி
கட்டிள‌ங்காளைக‌ளை
அவிழ்த்துவிட்டு
வீர‌ம் பொங்க‌ விர‌ட்டிவ‌ர‌
வீதியில்லை சிங்கையிலே
எங்க‌ளுக்கு வேறு வ‌ழியுமில்லை
சிங‌கையிலே

காளையின்றி பொங்க‌லா?
வீர‌மின்றி உழ‌வ‌ர் திருநாளா?
வினா வ‌ந்து போகுமுன்னே
சிங்கார‌ சிங்கையிலே
சின்ஞ்சிறு ப‌குதியிலே
சிங்கைத் த‌மிழ‌ரின்
ஏற்ப்பாட்டிலே

க‌ட்ட‌வ‌ண்டி ஒன்னு வ‌ச்சு
ப‌சுக்க‌ளை ப‌க்க‌த்தில் வ‌ச்சு
அம்மாவுக்கும் அடுத்த‌ப‌டியா
ஆடுக‌ளை அம‌ர்த்தி அழ‌கு பார்த்து



வீர‌மா காளிய‌ம்ம‌ன் கோவிலிலே
பொங்க‌லிட்டு - கேம்ப‌ல் வீதியிலே
ப‌டைய‌லிட்டு
இங்கே கூடியிருக்கும்
அன்ப‌ருக்கும் கொடுத்து
கொண்டாடுவோம்
பொங்க‌ல் திருநாளை

தொலைதூர‌ம் வ‌ந்துவிட்டோம்
நாட்டை விட்டு, வீட்டை விட்டு
தொலைதூர‌ம் வ‌ந்துவிட்டோம்
தொலைந்துபோய் நிற்கின்றோம் - ஆனாலும்
தொப்புள் கொடி உற‌வான‌தால்
உன்னை ம‌ற்க்க‌முடிய‌வில்லை
தாய்(ம‌ண்ணை) ம‌ற‌க்க‌முடிய‌வில்லை

என‌த‌ருமை தாய் ம‌ண்ணே - த‌மிழ் ம‌ண்ணே
செம்மொழி புக‌ழ் பெற்று
சிற‌ந்தோங்கி புக‌ழ்பாடும்
உன்பெய‌ரால் (த‌மிழ‌ரென்று) கூடியுள்ளோம்
பொங்க‌ல் வைத்துக் கொண்டாட‌!

பொங்க‌லோ பொங்க‌ல்.
பொங்க‌லோ பொங்க‌ல்.

ந‌ன்றி ந‌ன்றி ந‌ன்றி


த‌மிழ் வ‌ண‌க்க‌த்துட‌ன்
உங்க‌ள் ப‌ர‌வை அசோக்குமார்