Saturday, April 11, 2009

உங்கள் பரவைஅசோக்குமார்

பரவை அசோக் குமார் உங்களை அன்புடன் அழைக்கிறேன் இந்த வலைபக்கத்தில் என்னுடைய பக்கத்தில் நிறைய கதை மற்றும் கவிதைகள் சேர்க்க உள்ளேன் நீங்கள் படித்து மகிழ இது நல்ல பக்கமாக அமையும் என்பதில் ஐயமில்லை. வணக்கம் வாருங்கள் என் வலை பக்கத்தில் . அன்புடன் பரவைஅசோக்குமார்

Friday, April 10, 2009

பரவைஅசோக்குமார் சிங்கை

“கவிதை”

வந்துவிடு என் சிங்கபூர் கணவா

(ஒரு அபலைப்பெண் அழுகுரல்)வாழ்க்கை பட்டமரமாய் போன... பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம் நின்றுஎடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்திரும்பி வந்துவிடு என் சிங்கபூர் கணவா...நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயேவிட்டுவிட்டாயோ என் இதயத்தை?அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?திரும்பி வந்துவிடு என் சிங்கபூர் கணவா...வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்!
என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல...மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!
பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனைபோல...மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !
கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் !மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...அழுவதும்... அணைப்பதும்....கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...இடைகிள்ளி... நகை சொல்லி....அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி என"

இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு....எனை தீயில் தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்... என் சிங்கபூர் கணவா! கணவா.....! எல்லாமே கனவா.......?கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?

12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ....

5 வருடமொருமுறை ஒலிம்பிக்....4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்.... ...2 வருடமொருமுறை கணவன் ...நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாயோ! இது வரமா….! இல்லை சாபமா...?அழகுக்காய் பிணத்தின் சாம்பலில் முகம் பூசுவோர் உண்டோ ?கண்களின் அழுகையை கண்ணாடி தடுக்குமா கணவா?நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்பக்கத்தில் புதுமண தம்பதிகள் கொஞ்சுவது எனை மோகத்தில் தள்ளுகிறது!திரும்பி வந்துவிடு என் சிங்கபூர் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம் விட்டுகொடுத்து... தொட்டு பிடித்து...தேவை அறிந்து.... சேவை புரிந்து...உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...வாரவிடுமுறையில் பிரியாணி... காசில்லா நேரத்தில் பட்டினி...இப்படி காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்இரண்டு மாதம்மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?
விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?பணத்தை தரும் பாரத வங்கி ! பாசம் தருமா?நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயேவிட்டுவிட்டாயோ என் இதயத்தை?பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி சிங்கபூர் சென்றாயே!பாலையில் நீ….! வறண்டது என் வாழ்வு..!வாழ்க்கை பட்டமரமாய் போன... பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம் நின்றுஎடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்! உன் சிங்கபூர் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?
விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு!விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா!திரும்பி வந்துவிடு என் சிங்கபூர் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்துவாழலாம்வணக்கத்துடன் உங்கள் பரவை அசோக்குமார்
சிங்கபூர்

பரவைஅசோக்குமார்

கதையும் கவிதையும்

மீண்டும் மீண்டும் உங்களிடமே தோல்வியடைய மாட்டீர்கள்
என்னை எவ்வளவோ மாற்றிக் கொள்ள முயற்சி செய்கிறேன்.
ஏனோ என்னுடைய முயற்சிகளில் பல வீணாகிவிடுகின்றது. மீண்டும் மீண்டும் என்னிடம் நானே தோற்றுப் போகிறேன்.
எதனால் இப்படி நடக்கிறது? இந்தத் தோல்வியைத் தடுக்க முடியுமா?
வாழ்வில் முன்னேறிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் உணர்வுக் குரல் இது.
எப்படி தடுப்பது என்பதை அனுபவமாக்குவது தான்
இந்த வாரக் கட்டுரை...
சுவையான சம்பவம் ஒன்று....
அந்த மனிதக் குரங்கைப்பார்ப்பதற்காகவே மக்கள் அதிகமாக அந்த விலங்குகள் சரணாலயத்திற்கு வர ஆரம்பித்தார்கள்.
பார்வையாளர்களையும், அதிக ரசிகர்களையும் அந்தக் குரங்கு ஈர்க்க ஆரம்பித்தது. எனவே, இருபதடி நீளத்தில் இருந்த கூண்டை அறுபதடி
நீளக் கூண்டாக மாற்றிக்கட்டினார்கள், இருபதடிக் கூண்டை அறுபதடிக் கூண்டாக
மாற்றிய பின்னர், ஆறு ஆண்டுகள் அந்தக் குரங்கு உயிர் வாழ்ந்திருக்கின்றது என்பது ஆச்சரியமல்ல, இருபதடி அறுபதடியாக மாறினாலும், அந்தக்
குரங்கு தன்னுடைய பழைய இருபதடிக் கூண்டு இருந்த இடத்தில் மட்டும்தான்
அடுத்த மூன்று வருடங்களும் வாழ்ந்தது புதிதாய் விசாலமாக்கப்பட்ட
நாற்பதடி கூண்டுப் பகுதியை அந்தக் குரங்கு
பயன்படுத்தவேயில்லை என்பதுதான் ஆச்சரியம்.
தான் வாழுமிடம் முன்பு இருந்ததை விட மூன்று மடங்கு அதிகரித்திருந்தாலும்,
அந்தக் குரங்கு தன்னுடைய உறைவிடத்தையோ, ஓய்வாய் அமருமிடத்தையோ மாற்றிக்கொள்ளவில்லை.
மேலும், அது சுற்றிச் சுற்றி உலவும் இடம் கூட அதே பழைய இருபதடியாகவே இருந்திருக்கின்றது ஏன்?
காரணம், அந்த இருபது அடிதான் தன் உலகம் என்று அது நம்பிவிட்டது.
அதனால்தான் அதன் உலகம் மூன்று மடங்கு பெரிதான
பின்பு கூட அதனால் அதை மாற்றிக்கொள்ளவே முடியவில்லை.
நீங்களே கூட உங்களின் வாழ்வில் சந்தித்த பலரைப் பார்த்திருப்பீர்கள். பணம் இருந்தும் கஞ்சமாயிருப்பார்கள்.
அன்பு உள்ளுக்குள் இருந்தும் எரிந்து விழுவார்கள். முன்னேற வாய்ப்புகள் பல இருந்தும் ஊதாரியாகவே இருப்பார்கள்.
இப்படியிருப்பவர்களும், தன்னை பலமுறை மாற்றிக்கொள்ள முயற்சித்து தோல்வியுற்றவர்களும் சிக்கியிருப்பது மேலுள்ள பிரச்னையில்தான்.
உங்களின் உலகம் இதுதான், இவ்வளவு தான் எனும் வரையறையைத் தாண்டாத வரை உங்களால் தோல்விகளைத்
தாண்ட முடியாது. என்று இந்த வரையறையை ஒருவர் தாண்டி வாழ ஆரம்பிக்கின் றாரோ,
அதற்கப்புறம் அவரால் வெற்றிகளைத் தடுக்க முடியாது.
உங்களின் உலகத்தை மாற்றுவது எப்படி? இதற்கு பதில் கிடைத்து விட்டால்...
மீண்டும் மீண்டும் உங்களிடமே தோல்வியடைய மாட்டீர்கள். மீண்டும் மீண்டும் உங்களிடமே வெற்றியடைவீர்கள்.

Gmail - Blogger Account Information - paravai.ashokkumar@gmail.com

http://mail.google.com/mail/?shva=1#inbox/௧௧எ௬௨ஏ௨ப௦௨டட்ப௦
அசோக் குமார் உங்களை அன்புடன் அழைக்கிறேன் இந்த வலைபக்கத்தில் என்னுடைய பக்கத்தில் நிறைய கதை மற்றும் கவிதைகள் சேர்க்க உள்ளேன் நீங்கள் படித்து மகிழ இது நல்ல பக்கமாக அமையும் என்பதில் ஐயமில்லை. வணக்கம் வாருங்கள் என் வலை பக்கத்தில் . அன்புடன் பரவைஅசோக்குமார்.