கதையும் கவிதையும்
மீண்டும் மீண்டும் உங்களிடமே தோல்வியடைய மாட்டீர்கள்
என்னை எவ்வளவோ மாற்றிக் கொள்ள முயற்சி செய்கிறேன்.
ஏனோ என்னுடைய முயற்சிகளில் பல வீணாகிவிடுகின்றது. மீண்டும் மீண்டும் என்னிடம் நானே தோற்றுப் போகிறேன்.
எதனால் இப்படி நடக்கிறது? இந்தத் தோல்வியைத் தடுக்க முடியுமா?
வாழ்வில் முன்னேறிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் உணர்வுக் குரல் இது.
எப்படி தடுப்பது என்பதை அனுபவமாக்குவது தான்
இந்த வாரக் கட்டுரை...
சுவையான சம்பவம் ஒன்று....
அந்த மனிதக் குரங்கைப்பார்ப்பதற்காகவே மக்கள் அதிகமாக அந்த விலங்குகள் சரணாலயத்திற்கு வர ஆரம்பித்தார்கள்.
பார்வையாளர்களையும், அதிக ரசிகர்களையும் அந்தக் குரங்கு ஈர்க்க ஆரம்பித்தது. எனவே, இருபதடி நீளத்தில் இருந்த கூண்டை அறுபதடி
நீளக் கூண்டாக மாற்றிக்கட்டினார்கள், இருபதடிக் கூண்டை அறுபதடிக் கூண்டாக
மாற்றிய பின்னர், ஆறு ஆண்டுகள் அந்தக் குரங்கு உயிர் வாழ்ந்திருக்கின்றது என்பது ஆச்சரியமல்ல, இருபதடி அறுபதடியாக மாறினாலும், அந்தக்
குரங்கு தன்னுடைய பழைய இருபதடிக் கூண்டு இருந்த இடத்தில் மட்டும்தான்
அடுத்த மூன்று வருடங்களும் வாழ்ந்தது புதிதாய் விசாலமாக்கப்பட்ட
நாற்பதடி கூண்டுப் பகுதியை அந்தக் குரங்கு
பயன்படுத்தவேயில்லை என்பதுதான் ஆச்சரியம்.
தான் வாழுமிடம் முன்பு இருந்ததை விட மூன்று மடங்கு அதிகரித்திருந்தாலும்,
அந்தக் குரங்கு தன்னுடைய உறைவிடத்தையோ, ஓய்வாய் அமருமிடத்தையோ மாற்றிக்கொள்ளவில்லை.
மேலும், அது சுற்றிச் சுற்றி உலவும் இடம் கூட அதே பழைய இருபதடியாகவே இருந்திருக்கின்றது ஏன்?
காரணம், அந்த இருபது அடிதான் தன் உலகம் என்று அது நம்பிவிட்டது.
அதனால்தான் அதன் உலகம் மூன்று மடங்கு பெரிதான
பின்பு கூட அதனால் அதை மாற்றிக்கொள்ளவே முடியவில்லை.
நீங்களே கூட உங்களின் வாழ்வில் சந்தித்த பலரைப் பார்த்திருப்பீர்கள். பணம் இருந்தும் கஞ்சமாயிருப்பார்கள்.
அன்பு உள்ளுக்குள் இருந்தும் எரிந்து விழுவார்கள். முன்னேற வாய்ப்புகள் பல இருந்தும் ஊதாரியாகவே இருப்பார்கள்.
இப்படியிருப்பவர்களும், தன்னை பலமுறை மாற்றிக்கொள்ள முயற்சித்து தோல்வியுற்றவர்களும் சிக்கியிருப்பது மேலுள்ள பிரச்னையில்தான்.
உங்களின் உலகம் இதுதான், இவ்வளவு தான் எனும் வரையறையைத் தாண்டாத வரை உங்களால் தோல்விகளைத்
தாண்ட முடியாது. என்று இந்த வரையறையை ஒருவர் தாண்டி வாழ ஆரம்பிக்கின் றாரோ,
அதற்கப்புறம் அவரால் வெற்றிகளைத் தடுக்க முடியாது.
உங்களின் உலகத்தை மாற்றுவது எப்படி? இதற்கு பதில் கிடைத்து விட்டால்...
மீண்டும் மீண்டும் உங்களிடமே தோல்வியடைய மாட்டீர்கள். மீண்டும் மீண்டும் உங்களிடமே வெற்றியடைவீர்கள்.
Friday, April 10, 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment